சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த 9-ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னிமலை பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பவர் அந்த சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு அவரது வீட்டில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீனதயாளனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.