11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு டெல்பினா(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுசிறு தவறுகளுக்காக ஜோஸ்பின் தனது மகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் மாணவியின் துப்பட்டா கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.