Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சி….. இருதரப்பினர் மோதியதால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண் வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அப்போது ஒருவரை ஒருவர் இரும்பு தடி மற்றும் நாற்காலி ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த தினேஷ்(24), பிரதீஷ்(22) ஆகிய இரண்டு பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |