Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய் கோளாறுகளும் ,  எளிய மருத்துவ முறைகளும் …!!

பொதுவாக 10 வயது முதல் 17 வயதுக்குள் பெண்கள் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வு  நடைபெறுகிறது.    இந்த மாற்த்திற்கு பின்னர் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற்படுகிறது. கருவுற்ற காலங்கள் மற்றும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு மாதவிடாய்  சுழற்சி நடைபெறுவதில்லை. மாதவிடாய் என்பது 3  முதல் 5 நாட்களுக்கு வெளிப்படுவதே சரியான சுழற்சியா கூறப்படுகிறது.

ஆனால்  இன்றைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில்  மாறுபட்ட உணவு பழக்கங்கள்,அதிக ஜங்புட் , இரவுப்பணி, மணஅழுத்தம், பணிச்சுமை இப்படி பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பருவம் எய்தியது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் வரை   பெண்கள் இதனால்  சந்திக்கும் பிரச்சனைகள்  ஏராளம்.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும். ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்கு தள்ளி போகும்.ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.

பொதுவாக தமிழகத்தில் பெண்களுக்கு  45- வயதுக்கு மேற்பட்ட காலகட்டத்தில் மாதவிடாய் இயற்கையாகவே நின்றுவிடும்.சிலருக்கு 40 வயதுக்குள்ளாகவே மாதவிலக்கு நின்று போகும்.

அதிக ரத்த போக்கு, சீரற்ற முறையில்  மாதவிலக்கு,   வெள்ளை படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது தகுந்த மருத்தவ ஆலோசனை பெறுவது நல்லது.

மாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் வராமல் இருப்பது,மாதவிடாய்  காலத்தில் அதிகமான அடிவயிற்று வலி ஏற்படுவது,உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் இ ருக்க கூடும். இதை கவணிக்காமல் விட்டால் கருப்பை  புற்று நோய் உள்ளிட்ட  உடல் நல பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

  மாதவிடாய்  பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 

கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை – மாலை இருவேளை உண்டுவர வேண்டும்.

இதனால் கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு.

மாதவிலக்கு சீராக ஏற்பட கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை – மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

100 கிராம் அசோகப்பட்டை தூளுடன் 25 கிராம் பெருங்காயத்துளை கலந்து வைத்து கொள்ளுங்கள். இதில் 2 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.

அசோக மரத்தின் பட்டைகள் மற்றும் மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும். கருப்பை கோளாறுகளை சரிசெய்ய அசோக மரப்பட்டை, மாதுளம் பழம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் குறையும்.

மேலும் அசோகாரிஷ்டம், சந்தனசவா அரிஷ்டம்  போன்ற இந்திய மருத்துவ மருந்துகளை தகுந்த மருத்தவர்களின்   ஆலோசனை பெற்று   பயன்படுத்தி மாதவிடாய் பிரச்சனைகளுக்கு   தீர்வு காணலாம்

Categories

Tech |