மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று எந்த ஒரு விஷயம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கடினப்பட்டு தான் செய்ய வேண்டி இருக்கும். எதிர்பார்த்தது தாமதமாகத்தான் வந்து சேரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களது அணுகுமுறையை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் ஓரளவுதான் வேலைச்சுமை குறையும்.
உங்களுக்கு மாலையில் இருந்து கொஞ்சம் தடைகள் வர ஆரம்பிக்கும். அதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. கூடுமானவரை இன்று நீங்கள் பேச்சை குறைத்துக் கொள்வது சிறப்பானதாக தான் அமையும். இன்று புதிய முயற்சிகளில் ஓரளவு தாமதமான நிலைதான் காணப்படும். தொழில் வியாபாரத்திலும் மெத்தனமான போக்கே காணப்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாக மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல், காரியங்களில் இழுபறி போன்றவை சமாளிக்க கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீல நிறம்