நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் மனைவியை பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.அதாவது நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பு கணக்கை தொடங்குங்கள். NPSகணக்கு உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டும் போது மொத்த தொகையையும் வழங்கும்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு பென்ஷன் வடிவில் வழக்கமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் உங்களது மனைவிக்கு மாதந்தோறும் எவ்வளவு ஓய்வு ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் போது உங்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்து கொள்ள முடியும். வெறும் 1000 ரூபாயில் உங்கள் மனைவி பெயரில் இதில் கணக்கை தொடங்குங்கள். இந்த கணக்கு 60 வயதில் முதிர்ச்சி அடைகிறது.
தற்போது உள்ள புதிய விதிகளின் படி நீங்கள் விரும்பினால் மனைவியின் வயது 65 வரை இந்த கணக்கை தொடர முடியும். அதாவது உதாரணமாக உங்களது மனைவிக்கு 30 வயதாகி அவருடைய NPSகணக்கில் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் வருடம் தோறும் முதலீட்டில் 10% வருமானம் கிடைத்தால் 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் 1.12 கோடி ரூபாய் இருக்கும். அதில் அவர்களுக்கு சுமார் 45 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் சுமார் 45 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற முடியும். இதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள்.எனவே உங்களது மனைவி எதிர் காலத்தில் சிரமப்படாமல் இருக்க கணவர்கள் இந்த கணக்கை தொடங்குவது நல்லது.