நாடு முழுவதும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது உணவு வழங்கல் துறை ஆணையர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி இந்த முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி மட்டுமே வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி விநியோகம் செய்யப்படும்.
இந்த முடிவு முதலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் எடுக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்கள் கோதுமைகான ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.இந்நிலையில் தற்போது பெரும்பாலான மாநிலத்தில் கோதுமை கொள்முதல் குறைந்துள்ளதால் ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பிரதான் மந்திரி ஹரிஸ் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.