10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,37,317 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் (97.95%) மாவட்டத்தில் அதிக சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்த படியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவிகிதமும் ராமநாதபுரம் 97.02 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் (97.22%) தேர்ச்சி விகிதம் அதிகம். ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்