பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விளக்கமளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு 30 பேர் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகளால் குண்டு வைக்கப்பட்டு தொடர்ந்து 2 குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம்தான் காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத் தான் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ்.ஐஎ.ஸ் இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் 100 பேருக்கு இந்திய விசா வழங்கப்பட்டுள்ளது.