12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த பாடப்பிரிவுகளில் மதிப்பீடு முறையில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடு திட்டத்தை அரசுத் தேர்வுகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களது விண்ணப்பங்கள் அடைப்படையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றி வருகிறது.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மறுமதிப்பீடு செய்யாமல் விடைத்தாளின் ஜெராக்ஸ் நகளுக்கு மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.