உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி நாட்டில் போரால் பாதிப்படைந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது சுமார் 3 மாதங்களை கடந்து ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதல் பயணமாக போரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார்.
உக்ரைன் படையினர் தாமதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மைக்கோலைவ் என்ற பகுதிக்கு சென்று அங்கு பாதிப்படைந்த கட்டிடங்களை பார்வையிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், ராணுவ வீரர்களை நேரில் சந்தித்துள்ளார். அதன்பிறகு ஒடேசா என்னும் மேற்கு நகரத்திற்கு சென்றிருக்கிறார்.