மாநில அளவிலான வூசு போட்டியில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநில அளவிலான சப் ஜூனியர் வூசு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியானது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் டாவுலு, சான்சூ போன்ற 2 பிரிவுகளில் சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய திறமைகளை நிரூபித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு மாநிலச் செயலாளர் ஜான்சன் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தென்னிந்திய வூசு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, வூசு தற்காப்பு கலையானது மார்ஷியல் ஆர்ட் தற்காப்பு கலையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளது என்றார். அதன்பிறகு வூசு போட்டியானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஏசியன் ஒலிம்பிக் தொடர்களில் இருப்பதாலும் வேலைவாய்ப்புகள் இதில் அதிகமாக இருக்கிறது. இந்த கலையை சிறுவர்-சிறுமிகள் ஆர்வமாக கற்று வருகின்றனர் என்றார். மேலும் தற்போது நடைபெற்ற வூசு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகள் இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.