தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரருமான இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் பிரக்ஞானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடன் சௌமியா சுவாமிநாதன் மற்றும் வனிதா அகர்வால் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தற்போது தங்கியிருந்த ஓட்டல் அறைகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.