தமிழ் சினிமா திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தனலட்சுமி, ஜானு,ஜெஸ்லி என பல கதாபாத்திரங்களுக்கு தன் சிறப்பான நடிப்பின் மூலமாக உயிரூட்டி இருக்கிறார் திரிஷா.
இதனைத் தொடர்ந்து தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷாவின் சமகால நடிகையான நயன்தாரா சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் ரசிகர்கள் திரிஷாவிடம் நீங்கள் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். கிட்டத்தட்ட நாற்பது வயதை நெருங்கும் திரிஷாவின் திருமணத்தை தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் த்ரிஷாவோ தற்போது திருமணத்தைப்பற்றி ஆசையில்லாமல் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிகின்றது. இந்த நிலையில் நடிகை திரிஷா அரசியலில் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பல நாட்களாக அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த திரிஷா ஒரு முன்னணி அரசியல் கட்சியில் இணைய இருக்கிறாராம்.
மேலும் தேசிய அளவிலான கட்சியில் திரிஷா இணைய இருப்பதாக இணையதளத்தில் ஒரு தகவல் வருகின்றது. ஒருவேளை திரிஷா அரசியலில் இறங்கினால் படங்களில் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. எனவே திருமணம் பற்றிய செய்தியை திரிஷா சொல்வார் என எதிர்பார்த்தால் த்ரிஷா அரசியலில் இறங்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.