Categories
மாநில செய்திகள்

தமிழக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களே!… மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழ்நாட்டில் சென்ற கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு சற்று தாமதமாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்ற மே மாதத்தில் முடிவடைந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20) ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருந்தது.

இந்நிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்டபடி இன்று காலை 9:30 மணியளவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக சரிபார்க்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு முடிவுகளை பெற்றிருக்கும் மாணவர்கள் அதற்கான மதிப்பெண் அட்டையை சரிபார்ப்பதற்கான விபரங்களை விரிவாக பார்க்கலாம். அந்த அடிப்படையில்,

# முதலாவதாக அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in-ஐ திறக்க வேண்டும்.

# அதன் முகப்புப்பக்கத்தில் “தமிழ்நாடு 10/12ஆம் வகுப்பு முடிவுகள் 2022” என எழுதப்பட்ட இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

# தற்போது சான்றுகளை உள்ளிட்டு சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும் .

# இவற்றில் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.

# இந்த முடிவை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக சேமித்துக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |