Categories
தேசிய செய்திகள்

கேரளா: தங்க கடத்தல் வழக்கு….. சொப்னா சுரேஷின் வாக்குமூலத்திற்கு ஆதாரம் இல்லை…. சரிதா நாயர் பரபரப்பு புகார்….!!

சொப்னா சுரேஷின் மீது  ஊழல் வழக்கில் கைதான நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தற்போது தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்க கடத்தல் வழக்கில் கைதான சொப்னா‌ சுரேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தங்க கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சொப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் முதல்வர் பினராயி விஜயனை பதவியிலிருந்து விலகுமாறு கூறி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொப்னா சுரேஷின் குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் இருக்கிறதா என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான நடிகை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக சரிதா நாயர் கூறுகையில், நான் சிறையில் இருக்கும் போது தான் சொப்னா சுரேஷும் சிறையில் இருந்தார். அதன்பிறகு சொப்னா சுரேஷ் தேவையில்லாமல் முதல்வர் மற்றும் அவரின் குடும்பத்தினரை  தங்க கடத்தல் வழக்கில் இழுத்து விடுகிறார். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில்தான் அவர் இயங்குகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் சொப்னா சுரேஷின் ரகசிய வாக்கு மூலத்தின் நகலை தனக்கு காண்பிக்குமாறு சரிதா நாயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |