Categories
உலக செய்திகள்

“ரஷ்ய சண்டை மேலும் தீவிரம்”…. நாங்கள் ரெடியா இருக்கோம்…. உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு….!!!!

ரஷ்யா சண்டையை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தடை இன்றி தொடர்ந்து 117-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தொழில் துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் கிழக்குப்பகுதிகள் சென்ற பல வாரங்களாக கடுமையான போர் தாக்குதல்களால் உலுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது “இந்த வாரம் ரஷ்யா போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என நாங்கள் வெளிப்படையாக எதிர்பார்க்கிறோம்.

அதற்கென நாங்கள் தயாராகி வருகிறோம். கிழக்குப்பகுதியில் ரஷ்ய படைகளின் புது தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது. நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுடையது அனைத்தையும் நாங்கள் திருப்பி பெறுவோம். கருங்கடல் உக்ரைனியர்களுக்கு உடையதாகவும், பாதுகாப்பாகவும் மாறும். நமது ராணுவம் காத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக உக்ரைன் காத்துகொண்டிருக்கிறது.

அவர்களிடம் இருந்து இந்த வார இறுதிக்குள் ஒரு நம்பிக்கையான முடிவை எதிர்பார்க்கிறோம். உக்ரைனுக்கு இது போன்ற சில விதிவிலக்கான முடிவுகள் அமைந்து உள்ளதாக” அவர் கூறினார். நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சில வருடங்களுக்கு நீடிக்கும் என எச்சரித்ததுடன், நீண்டகால ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க மேற்கு நாடுகள் தயாராக இருக்குமாறு வலியுறுத்தினார்.

Categories

Tech |