Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டை விட சற்று கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் அரசு பங்குகளை விற்பது, வரியில்லா வருமானங்களை அதிகரிப்பது, மாணியங்களைக் குறைப்பது உள்ளிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பல்வேறு அறிவிப்புகள் இருந்தன.

அதேபோல் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சென்ற ஆண்டைவிட(ரூ. 3.18 லட்சம் கோடி) ஆறு விழுக்காடு கூடுதலாக ரூ. 3.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர் கப்பல்கள் உள்ளிட்டவை வாங்க ரூ. 1.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • இதேபோல் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு ரூ. 20.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் 1.5 விழுக்காடு அளவுக்கு பாதுகாப்புத் துறைக்கு இந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • இதனால் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தைச் சேர்த்து, பாதுகாப்புத் துறைக்கான மொத்த பட்ஜெட் ரூ. 4.7 லட்சம் கோடியாக உள்ளது.

Categories

Tech |