தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை. துக்க நிகழ்வு களில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.