Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 24 முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமான https://www.dge.tn.gov.in/மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |