Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் 10 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள வங்கிகள் பின்பற்றும் பிராந்திய விடுமுறையின் போது அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படும். மேலும் அனைத்து மாதங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயற்படாது.தற்போது வருகின்ற ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்கள்:

வங்கி விடுமுறைகள்:

  • 1 ஜூலை – ரத யாத்திரையை முன்னிட்டு ஒரிசாவில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • 3 ஜூலை – ஞாயிறு
  • 7 ஜூலை – கர்ச்சி பூஜைவை முன்னிட்டு திரிபுராவில் வங்கிகள் செயல்படாது.
  • 9 ஜூலை – 2வது சனிக்கிழமை
  • 10 ஜூலை – ஞாயிறு
  • 11 ஜூலை – ஈத்-உல்-அஷாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் வங்கிகள் அடைப்பு.
  • 17 ஜூலை – ஞாயிறு
  • 23 ஜூலை – 4வது சனிக்கிழமை
  • 24 ஜூலை – ஞாயிறு
  • 31 ஜூலை – ஞாயிறு

Categories

Tech |