Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு மாணவர்களே!…. தேர்வு முடிவுகளில் ஏதாவது குழப்பம் இருக்கா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!!

தமிழகத்தில் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் வைக்கப்படாமல் முந்தைய வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கையானது நடந்தது. இந்த வருடம் 9 -12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவருக்குமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ஆம் தேதிமுதல் பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இதையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு துவங்கப்பட்டது. முன்னதாக 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 17-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதாக இருந்தது. அதன்பின் தேர்வு முடிவுகள் மாற்றியமைக்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9:30 மணிக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12:00 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கிட்டத்தட்ட 9,12,620 பேர் எழுதி இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4,52,499 பேரும், மாணவர்கள் 4,60,120 நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3ஆம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் 10ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அத்துடன் மொத்தமாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனிடையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடியவிரைவிலேயே மறு தேர்விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளில் ஏதேனும் குழப்பங்கள் இருப்பின் மாணவர்கள் 1098 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |