2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்தார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறைக்கான புதிய அறிவிப்புகள்
-
நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்விதமாக வரும் 2020-21 நிதியாண்டில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
-
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலமான ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பழங்குடி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
-
மத்திய கலாசார அமைச்சகத்திற்கு மூன்றாயிரத்து 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
-
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ், பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்து கல்விகளுக்காக ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் அண்டு கல்ச்சர்’ என்ற பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.
-
ராக்கிகரி, ஹஸ்தினாபூர், ஷிவ்சாகர், தோலாவிரா, ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.