Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்..! சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து…. முகத்தை கல்லால் தகி கொடூரம்….!!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுடைய பழங்குடியின சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென காணவில்லை. இதையடுத்து மறுநாள் சில வழிப்போக்கர்கள், ஒரு குழியில் சிதைக்கப்பட்ட முகத்துடன் சிறுமியின் சடலம் இருப்பதை பார்த்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. அதாவது தோட்டத்திற்கு சென்ற அந்த சிறுமியை 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் பின் தொடர்ந்து வழியிலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியின் முகத்தை கல்லால் அடித்து சிதைத்து கொலை செய்து, சடலத்தை குழியில் வீசி அதை கற்கள் மற்றும் புல்லால் மூடியுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |