Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி…! ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை…. வெளியான திடுக் காரணம்….!!!!

மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டம் மிராஜ் தாலுகா மஹைசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் வான்மோர் என்பவரின் வீடு இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அககம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் வந்து பார்த்தபோது, ​​ஒரு அறையில் 6 பேரும் மற்றொரு அறையில் 3 பேரும் சடலமாக கிடந்தனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் அக்கதாயி வான்மோர் (72), போபட் யாலப்பா வான்மோர் (52), சங்கீதா போபட் வான்மோர் (48), அர்ச்சனா போபட் வான்மோர் (30), சுபம் போபட் வான்மோர் (28), மாணிக் யல்லப்பா வான்மோர் (49), ரேகா மாணிக் வான்மோர் (45), ஆதித்ய மாணிக் வான்மோர்(15), அனிதா மாணிக் வான்மோர் (28), ஆகியோர் அடங்குவர். போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

Categories

Tech |