Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றது. அறிவிப்பு பலகையில் இது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். இதில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையானது திலகர் திடல் அருகே இருந்து அகழி வரை உள்ள கோட்டைச் சுவரில் வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |