Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு..!!

வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், தத்ரூபக் காட்சிப் படங்கள், ஆன்மிக வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த ஒவியக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு ஓவியக் கண்காட்சியை கண்டு களித்தனர். மேலும் இந்த ஒவியக் கண்காட்சியில் வரையப்பட்டு இருந்த ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Categories

Tech |