தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின்னர் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.
திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இதனால் நம்பர் ஒன் நடிகை என்று இடத்தை நயன்தாரா இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பட வாய்ப்புகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.