நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று 11ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு படிக்கும் 126 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாவில் சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2019-20ஆம் ஆண்டிற்கான மாண்வர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு 4 ஆயிரத்து 837 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.