தமிழக பாஜக. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை யோகா தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான யோகா முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி போன்றோர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெறும் யோகா முகாமில் பங்கேற்கின்றனர்.
மத்திய கல்வித் துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி, தஞ்சாவூர் கோயிலில் நடைபெறும் யோகா முகாமிலும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் யோகா முகாமில் மத்திய வெளியுறவு, கலாசாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோரும் பங்கேற்கின்றனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.