சூறாவளி புயலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சீனாவில் உள்ள பெய்ஜிங் சுற்றியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 7 மாகாணங்களில் மழைநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடுமையான மழையின் காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குவாங்டனில் உள்ள போஷான் நகரை கடுமையான சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் தடை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பல கார்களும் சேதம் அடைந்துள்ளது. மேலும் சூறாவளி புயலினால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.