மரம் முறிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியில் தொழிலாளியான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் சேர்ந்து மணம்தவிழ்ந்தபுத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் கன மழை பெய்துள்ளது.
இந்நிலையில் சாலை ஓரம் இருந்த மரம் திடீரென முறிந்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குப்புசாமியின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்புசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.