இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரியின் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ராணுவ அதிகாரியாக ஜெனரல் சர் பேட்ரிக் சான்ட்ரஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அதிரடியாக ஒரு உத்தரவை போட்டுள்ளார். அவர் மூன்றாம் உலகப்போர் வந்துவிட்டது என்றும், அதற்கு தயாராக இருங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஷ்யா மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று கூறிவரும் நிலையில், இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரியின் உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.