இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்து காராச்சி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது.
இதனையடுத்து இந்த மீனவர்கள் வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் லாகூர் நகரில் இருந்து ரயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர் என்று பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.