லெபனானில் முதல் தடவையாக ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, உலக நாடுகளில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றன. கனடா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது.
இந்நிலையில், முதல் தடவையாக லெபனானில் ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. அந்த நபர் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.