தமிழகத்தில் அரசு விரைவு ‘ஏசி’ பேருந்துகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இப்போது உள்ள எம்எல்ஏக்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்களுக்கு இனி சாதாரண பேருந்துகள் மட்டுமில்லாமல் ஏசி பேருந்துகளிலும் இலவசப் பயணத்தை அனுமதிக்கவேண்டும்.
இந்த அனுமதி, இருக்கை மற்றும் படுக்கை வசதியுடைய பேருந்துகளுக்கும் பொருந்தும். அதனைதொடர்ந்து எம்எல்ஏவுக்கு படுக்கை வசதி வழங்கும் அதே நேரம், அவரின் மனைவி அல்லது துணையாளருக்கு இருக்கையில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். மேலும் இனி முக்கிய பிரமுகருக்கான வசதியை முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.களுக்கு வழங்குவது மட்டுமில்லாமல் இது குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.