அமெரிக்க நாட்டின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையானது உதவித்தொகை வழங்குகிறது.
படிப்புகள்:
ஆர்க்கி டெக்சர் அண்ட் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சர், லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ் போன்ற துறைபடிப்புகளில் சேர்க்கை பெறுபவர்கள் இந்த உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அமெரிக்க நாட்டின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் அட்மிஷன் பெற்றிருக்கவும். அத்துடன் நிதியுதவி தேவைக்கான வேண்டுகோளையும் விடுத்திருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
8 செமஸ்டர் வரையிலான இள நிலை பட்டப்படிப்புகளுக்குரிய கல்விக் கட்டணம், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆர்க்கி டெக்சர் ஆகிய எட்டு செமஸ்டர்களுக்கும் அதிகமான படிப்புகளை பயிலும் மாணவர்கள், மீதம் உள்ள செமஸ்டர்களுக்கான கல்விக்கட்டணத்தை அவர்களே ஏற்க வேண்டும். இருப்பினும் தங்கும் செலவு, உணவு, மருத்துவகாப்பீடு, போக்குவரத்து செலவு போன்றவை அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
உதவித்தொகை எண்ணிக்கை:
மொத்தம் 20 இந்திய மாணவர்களுக்கு இந்த உதவித் தொகையானது வழங்கப்படுகிறது. அமெரிக்க நாட்டின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகையானது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும்காலம்:
பொதுவாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உரிய ஆவணங்களுடன் இந்த உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் டிசம்பரில் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். மேலும்
விபரங்களுக்கு https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship என்ற இணையதளத்தை அணுகவும்.