ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 8,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.