Categories
மாநில செய்திகள்

“15 மாவட்டங்களில் கனமழை”….. அப்ப சென்னையில் இன்னைக்கு இருக்கு கச்சேரி….!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை இன்றும் நாளைக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மாலைப்பொழுதில் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |