Categories
உலக செய்திகள்

ஏவுகணை சத்தத்திற்கு மத்தியில்…. கடையை திறந்து வியாபாரம் செய்யும் உக்ரைன் வியாபாரிகள்..!!!

உக்ரேன் நாட்டிலிருக்கும் பாக்முட் என்ற நகரத்தைச் சேர்ந்த மக்கள் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் அன்றாட பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது 18-ஆம் நாளாக ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் பல நகரங்கள் பதிப்படைந்திருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் பாக்முட் நகர மக்கள் ஏவுகணை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதற்கு மத்தியில் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, ரஷ்ய படையினர் ஒருபுறம் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வெடிகுண்டு தாக்குதல்கள், ஏவுகணை சத்தங்களுக்கு நடுவே வியாபாரிகள் சிலர் தங்களது கடைகளை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |