அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் கோரிக்கை விடுத்தும் ஈபிஎஸ் அதனை நிராகரித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஓபிஎஸ்- க்கு எழுதிய கடிதத்தில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி நாளை மறுதினம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.அதில் பங்கேற்க அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் புகைப்படம் அடங்கிய பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஈபிஎஸ் பக்கம் தாவியுள்ளனர் பொதுக்குழுவில் 2,700 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் கிட்டத்தட்ட 2,300 பேர் ஈபிஎஸ்- க்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அதனால் அதிமுக வட்ட தலைமை தீர்மானம் இ பி எஸ்-க்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அரசியலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.