இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகினார். 1998-2004ஆம் காலகட்டத்தில் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இவர் பதவி வகித்தார். 2018 ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகியதை அடுத்து கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Categories