Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு… சிறுவன் பரிதாப பலி…!!!

அமெரிக்க நாட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். அப்போது திடீரென்று பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.

இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். எனினும் அந்த நபர் மக்களை நோக்கி தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்துள்ளார். இதில் 15 வயதுடைய ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 7 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

Categories

Tech |