சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலியபெருமாள் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலிய பெருமாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலியபெருமாள் கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாமியார்பேட்டையில் உள்ள அய்யப்பன் என்பவர் வீட்டிற்கு கடத்தி சென்றார்.
அதன் பின்னர் கலியபெருமாள் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வீடு எடுத்து தங்கி வந்தனர். மேலும் கலியபெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலியபெருமாளை கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்புத் துறையின் சமூக நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.