தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் விதமாக திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக நான் முதல்வர் என்ற திட்டம் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதாகும். இதில் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் என்பது குறித்து வழிகாட்டபடும்.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.