திங்கள் சந்தை அருகே உள்ள தலக்கோணம் புது விலை இன்னும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயின்(38). இவர் திங்கள் சந்தை அருகே உள்ள ஆரோக்கியத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி டிப்டாப்பாக வந்த பெண் ஒருவர் 19.350 ராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூபாய் 68,000 வாங்கி சென்றார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் பெயர் சந்தியா எனவும், கணவன் பெயர் விஜி எனவும் செட்டி தெரு இரணியல் என முகவரியை மட்டும் வாய்மொழியாக கூறியிருக்கின்றார்.
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி ஜெனின் கடையில் இல்லை அவரது தம்பி மட்டுமே இருந்துள்ளார். அப்போது ஒரு பெண் வந்து 21.5 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை கொடுத்து ரூபாய் 75,000 வாங்கியுள்ளார். அப்போது அவருடைய பெயர் சைலஜா எனவும், கணவர் பெயர் சஜின் கோகுலம் இரணியல் மெயின் ரோடு என முகவரி கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் சமீபகாலமாக நகைகளை மோசடி நடைபெற்று வருவது குறித்து நாளிதழ்கள், சமூக வலைத்தளங்களை வெளியானதை அறிந்த லெனின் அந்த டிப்டாப் பெண் கொடுத்த நகைகளை சோதனை செய்து இருக்கிறார். அப்போது அந்த நகைகள் அனைத்தும் செப்பு கம்பிகள் தங்க முலாம் பூசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்தப் பெண் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்திருக்கிறது.
மூலம் 5 பவுன் எடை கொண்ட இரண்டு போலி நகைகளை வைத்து மோசடி செய்தும் ஒரே பெண் என்பதும் தெரியவந்தது. இதன்பின் இதுபற்றி ஜெனின் இரணியல் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலி நகையை கொடுத்து ஏமாற்றியதாக நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜேசு ராஜாவின் மனைவி அனுஷா என்பது தெரியவந்துள்ளது. இவர் தக்கலை பகுதிகளில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலி நகைகளை கொடுத்து பணம் மோசடி தொடர்பாக இளம்பெண் மீது தொடர்ந்து போலீசில் புகார் கூறப்பட்டு வருவதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.