கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் ஏற்கனவே தனக்கு பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் உக்ரைன் மீதான போரால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நோபல் தங்க பதக்கத்தை விற்க முடிவு செய்தார்.
ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு 103 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக, பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் வழங்கியுள்ளார்.