மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் சங்கு(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சங்கு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது நெல்லை ரகுமத் நகர் அருகே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.