காவலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பொய்லான் நகரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை சித்தா மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சுப்பையா என்பவர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சுப்பையா பாஸ்கரை செங்கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.