மேலும் கீழ் பெர்த்தில் பயணம் செய்யும் பயணிகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் நீண்ட நேரமாக அமர்ந்துகொண்டே இருப்பார்கள். எனவே அவர்கள் தூங்கினால் தான் மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து, அதில் மற்றவர் படுக்க முடியும். இந்நிலையில் இதுபற்றி கேட்டாலும், சில நேரங்களில் பயணிகளுக்கிடையே, சில வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட கூடும். இதையடுத்து, இதுபோன்ற சூழலில் மிடில் பெர்த் கிடைத்த பயணிகள், ரயில்வேயின் விதிமுறையினை பற்றி தெரிய வேண்டும்.
இந்நிலையில் ரயில்வே விதிகளின்படி, மிடில் பெர்த்தில் பயணம் செய்யும் பயணிகள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே, அந்த பெர்த்தில் தூங்க முடியும் எனவும், மேலும் அதைத் தாண்டி தூங்கினால், நீங்கள் அதைத் தடுக்கும் உரிமை உள்ளது.
இதையடுத்து, காலை 6 மணிக்குப் பின், மற்ற பயணிகளுக்கு தொந்தரவு செய்யாத வகையில், கீழ் பெர்த்தில் உட்காருவதற்கு ஏற்றவாறு, மிடில் பெர்த்தை மடக்கிவிட வேண்டும். இதேபோல், இரவு 10 மணிக்கு மேல், பயணிகள் தூங்கிய பின், யாரும் தொந்தரவு செய்யக் கூடாது எனவும், மேலும் டிக்கெட் பரிசோதகர் கூட, அந்நேரத்தில் டிக்கெட் பரிசோதனை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியானது, இரவு 10 மணிக்கு மேல், பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.